தேடல்

"புதையல்' எடுத்து தருவதாக ரூ.70 ஆயிரம்,நகை மோசடி: 4 பேர் கைது

காளையார்கோவில்:புதையல் எடுப்பதாக கூறி நகை, ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இரு பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மாரியாயி நகர் கருணாநிதி மகள் கவிதா. இவர்,முக்கிராம் மனைவி புஷ்பாவதி துணையுடன் சாமி ஆடி, முக்கிராம் வீட்டில் புதையல் இருப்பதாக, பக்கத்து வீடு முனியாண்டி மனைவி லதாவை நம்ப வைத்தார். புதையலை எடுக்க, பொள்ளாச்சி சாமியாடிகளுக்கு பணம் தரவேண்டும் என லதாவிடம் கூறியுள்ளார். புதையல் கிடைத்தவுடன், இரு தரப்பும் பிரித்துக்கொள்ள முடிவு செய்தனர். இதை நம்பிய லதா, கடந்த நவ.,3ம் தேதி தன்னிடமிருந்த அரை பவுன் நகை, 70 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். கீழவிளாம்பட்டி மகாலிங்கம், வடயன்வயல் பூமிநாதன், பொள்ளாச்சி கருணாகரன் பணிக்கர், பாண்டி ஆகியோர் நவ.,3ம் தேதி இரவு முக்கிராம் வீட்டில் தோண்டியும்,புதையல் கிடைக்கவில்லை. நீங்கள் ஒருவாரம் விரதம் இருந்தால், புதையல் கிடைக்கும் எனக் கூறி பணம், நகையுடன் தப்பினர். லதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது கணவர் முனியாண்டி புகாரின்படி, புதையல் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றிய முக்கிராம்,35, புஷ்பாவதி, 32, கவிதா, 18, பூமிநாதன், 32. கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்