தேடல்

புதிய எம்பிவியை களமிறக்க ஹூண்டாய் திட்டம்

புதிய எம்பிவி காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த புதிய எம்பிவி அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவருகின்றன. யுட்டிலிட்டி கார்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனமும் இந்த செக்மென்ட்டில் விரைவில் இறங்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. அடுத்த ஆண்டு புத்தம் புதிய எம்பிவி காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எச்என்டி-7 என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய காம்பெக்ட் எம்பிவியை கடந்த டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹெக்சா ஸ்பேஸ் என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக ஹூண்டாய் வைத்திருந்தது. புளூயிடிக் டிசைனில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த புதிய எம்பிவி தாராள இடவசதியையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கும். மேலும், 30 வயது முதல் 40 வயது வரையிலான வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த எம்பிவியை ஹூண்டாய் களமிறக்குகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.