தேடல்

உ.பி.,யில் மருத்துவ மாணவி பெயரில் பள்ளி

பாலியா( உ.பி): டில்லியில்ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு, சிங்கப்பூரில் மரணமடைந்த மருத்துவ கல்லூரி மாணவியின் சொந்த ஊரான உ.பி.,யின் பாலியா மாவட்டத்தில் உள்ள மெட்வார் காலன் கிராமத்தில் உள்ள துவக்க பள்ளிக்கு, அந்த மாணவியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான முடிவு, மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் எடுக்கப்பட்டதாக கிராம தலைவர் கூறினார். விரைவில் பஞ்சாயத்துகூட்டப்பட்டு பெயர் சூட்டுவதற்கானஒப்புதல் பெறப்படும் என கூறினார்.கிராமத்தில் மாணவியின் நினைவாக கட்டடம் மற்றும் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என மருத்துவ மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.