தேடல்

பெரம்பலூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; பதட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதட்டம் நிலவுகிறது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி. களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் முருகன் மற்றும் சேகர் மகள் கனிமொழி ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நேற்று மணமகள் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதி வழியாக மணமகள் ஊர்வலம் நடந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த டி.ஐ.ஜி., அமல்ராஜ், மாவட்ட எஸ்.பி., ராஜசேகர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.