தேடல்

பார்லி.,தேர்தல் எப்போது வந்தாலும் தி.மு.க.,வெற்றிக்கு பாடுபட வேண்டும்

தென்காசி:பார்லி.,தேர்தல்

எப்போது வந்தாலும் தி.மு.க.,வை அமோக வெற்றி பெறச் செய்ய தொண்டர்கள் பாடு

பட வேண்டும் என தென்காசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்

கருப்பசாமிபாண்டியன் பேசினார்.தமிழகத்தில் ஏற்பட்டு வரும் மின் வெட்டை

கண்டித்து தி.மு.க.,சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை

மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமை வகித்து பேசும் போது,

தி.மு.க., தலைவர் கருணாநிதி எல்லோரையும் மதிப்பவர். வைகோ தி.மு.க.,வில்

இருந்த போது அவரை போர்வாள் என கூறினார். ஆனால் அந்த போர்வாளே அவர் மீது

பாய்ந்தது. வைகோ பொடாவில் இருந்த போது அவரை வெளியில் கொண்டு வர

அரும்பாடுபட்டவர் கருணாநிதி.தமிழகத்தில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

நடத்தினால் அனுமதி கொடுக்க கூடாது என்று எழுதப்படாத சட்டம் உள்ளது.

தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடும் வழக்கமும் உள்ளது. தி.மு.க.,

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காகவே உழைக்கிறது. இந்திரா

காந்தி பிரதமராக இருந்த போது துணை பிரதமர் பதவி கருணாநிதியை தேடி வந்தது.ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டு தமிழக மக்களுக்காகவே உழைத்து

வருகிறார்.
தி.மு.க.,ஆட்சியின் போது நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம்தான்

மின் வெட்டு இருந்தது. ஆனால் இப்போது நாள் ஒன்றுக்கு 18 மணி நேர மின்

வெட்டு உள்ளது. மின் வெட்டுக்கு காரணம் தி.மு.க.,தான் என ஜெயலலிதா

கூறுகிறார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற பின் பருவ மழை பொய்த்து விட்டது.

இதற்கும் தி.மு.க.,தான் காரணமா?மின் வெட்டு காரணமாக பொருட்களின் விலை

மூன்று மடங்கு உயர்ந்து விட்டது. பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி

வருகின்றனர். மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. தென்காசியில்

ரயில்வே மேம்பாலத்தை கொண்டு வந்தது நான்தான். அதற்காக இன்னும் பாலம் பணியை

முடிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர். எம்.எல்.ஏ.,வாக இருந்த

போது கான்ட்ராக்டர்களிடம் நான் ஒரு காபி கூட வாங்கி குடித்ததில்லை. ஆனால்

இப்போது தென்காசி நகராட்சியில் அனைத்து பணிகளிலும் கமிஷன்தான்

தலைதூக்கியுள்ளது. இதனால் வளர்ச்சி பணிகள் கேள்விக்குறியாகி

விட்டன.தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. தினமும் கொலை, கொள்ளை,

வழிப்பறி நடக்கிறது. இதனால் நகை அணிந்து கொண்டு பெண்கள் வெளியில் செல்ல

முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேர மின் வெட்டு திருடர்களுக்கு

கொண்டாட்டமாகி விட்டது. மின் வெட்டு பிரச்னையை வீடு வீடாக சென்று மக்களிடம்

தி.மு.க.,வினர் எடுத்துக் கூற வேண்டும்.பார்லி.,தேர்தல் எப்போது வந்தாலும்

தி.மு.க., அமோக வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும். ஜெயலலிதா

ஆட்சியில் தி.மு.க.,வினர் வேட்டையாடப்படுகின்றனர். தமிழகத்தில் ஜெயலலிதா

ஐந்து ஆண்டுகள் ஆளட்டும். அதன் பின்னர் நாம் மக்கள் செல்வாக்கால் அவரை

வீழ்த்தி விட்டு ஆட்சிக்கு வருவோம் என்றார்.

தென்காசி நகர செயலாளர்

ஆயான் நடராஜன், ஒன்றிய செயலாளர் ராமையா முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை

வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. அ.தி.மு.க.,பிரமுகர் சந்தனபாண்டி

அக்கட்சியில் இருந்து விலகி கருப்பசாமிபாண்டியன் முன்னிலையில்

தி.மு.க.,வில் சேர்ந்தார்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகராட்சி தலைவர்

கோமதிநாயகம், மாவட்ட பிரதிநிதிகள் பாலாமணி, முருகேசன், கருப்பண்ணன்,

முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இசக்கி பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி

செயலாளர் ஜம்புநாதன், இலஞ்சி டவுன் பஞ்.,முன்னாள் தலைவர் பிச்சையா,

கடையநல்லூர் நகராட்சி தலைவர் சைபுன்னிசா, ஒன்றிய செயலாளர் காசிதர்மம் துரை,

நகர பொருளாளர் நடராஜன், துணை செயலாளர் ஜோதிபால்ராஜ், கவுன்சிலர்கள் சாமி,

இப்ராகிம், முன்னாள் கவுன்சிலர் ராமராஜ், முருகன், வெல்டிங் மாரியப்பன்,

இளைஞரணி முத்துவேல், சாதிர், மேலகரம் கிட்டு, முன்னாள் அறங்காவலர்

வீரபாண்டி, சண்முகநாதன், செல்வஞான பாண்டியன், சொக்கலிங்கம்,

முத்துக்குமாரசாமி, ராஜேஸ்வரி, செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.