தேடல்

பிரதமருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

லூதியானா:பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் பிரதமரைநாட்டின் பொருளாதார சீரமைப்பின் சிற்பி எனவும் கவுரவப்படுத்தியுள்ளது. இந்த விழாவில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அறிவியல் துறை இயக்குநர் உரையாற்றுகையில்,பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாடு பல வெற்றிகளை பெற்றுள்ளது. பிரதமரின்கல்வித்திறமை மற்றும் உலக பொருளாதாரம் குறித்த மதிநுட்பம் காரணமாக உலகமே அவரை மதிக்கிறது என கூறினார்.