தேடல்

பிரதமருடன் முலாயம் சிங் சந்திப்பு

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்த சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ், பதவி உயர்வில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமது கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் மற்றும் அவரது மகனும், உ.பி., முதல்வருமான அகிலேஷ் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.