தேடல்

பிரேமா ஜெயக்குமாருக்கு கருணாநிதி, வாசன் பாராட்டு

சென்னை: சி.ஏ., இறுதித்தேர்வில் முதலிடம் பிடித்த பிரேமா ஜெயக்குமாருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் வாசன் பாராட்டு தெரிவித்துள்ளனர். அகில இந்திய அளவில் நடந்த சி.ஏ., இறுதித்தேர்வில் மும்பையில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி பிரேமா ஜெயக்குமார் முதலிடம் பிடித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வாசன், ரூ. 5 லட்சம் நிதியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். பிரேமாவின் தந்தை ஜெயக்குமார் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். பிரேமா குறித்து வாசன் கூறுகையில், பிரேமாவின் செயல்பாடுகள், படிக்கும் மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இதே போல், தி.மு.க., தலைவர் கருணாநிதி ரூ. 1 லட்சம் பரிசு வழங்கியுள்ளார்.