தேடல்

பிரியாணி: சினிமா (சமையல்) குறிப்புகள்

சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களின் சறுக்கலுக்கு பிறகு பிரியாணி படத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார் கார்த்தி. இதை எப்படியாவது வெற்றிப்படமாக்கியே தீர வேண்டும் என்று இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் அடித்துச் சொல்லிவிட்டாராம். இதனால் இதுவரை இல்லாத கார்த்தியாக மாற்றிவிட்டார் வெ.பிரபு. தாடி மீசையெல்லாம் குறைத்து ஆளையே டிரிம் பண்ணியிருக்கிறார். இதோ பிரியாணி பற்றி சில முன்னோட்ட தகவல்கள்.

* சாதாரண சென்னைப் பையன் கார்த்தி. ஹன்சிகா, கார்த்தி, பிரேம்ஜி மூணு பேரும் சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸ். சதா சண்டைபோட்டுக்கிட்டே இருப்பாங்க. வயது அதிகமாகி வாலிபர்கள் ஆன பிறகும் இது தொடரும், கார்த்தி, ஹன்சிகா பண்ற தப்பெல்லாம் பிரேம்ஜி தலையில விடியும். ஒரு கட்டத்துல விளையாட்டா செய்ற ஒரு காரியம் பெரிய வினையாகி அது பிரேம்ஜியோட உயிருக்கே ஆபத்தாயிடும். அதுலேருந்து கார்த்தி, பிரேம்ஜிய எப்படி காப்பாத்துறார்ங்றதுதான் கதை.

*கார்த்தி வர்ற எல்லா சீன்லேயும் பிரேம்ஜி இருப்பார். இரண்டு பேருக்குமான காமெடியும், கார்த்தி, ஹன்சிகாவுக்கும் இடையேயான காதலும், இதற்கு நடுவில் வரும் ஆக்ஷன் பிளாக்கும்தான் திரைக்கதை.

*படத்துக்காக ஹன்சிகா தனது எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். கார்த்தியும் ஸ்லிம் ஆகியிருக்கிறார்.

*யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் 100 வது படம். அதனால் யுவன் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.

*சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. அதாவது அவர் நடிகர் சூர்யாவாகவே வருகிறாராம்.