தேடல்

புறநகர், "பங்க்'களில் டீசலுக்கு வரிசை கட்டும் மாநகர பஸ்கள்

பல்லாவரம் : டீசல்

நிரப்புவதற்காக, பயணிகளுடன் மாநகர பஸ்கள், புறநகர் பெட்ரோல் பங்க்களில்

வரிசை கட்டி நிற்கின்றன. காத்திருக்க முடியாமல் அவசரப்படும் பயணிகளை,

நடத்துனர்கள், அவ்வழியாக செல்லும், வேறு பஸ்களில் அனுப்பி வைப்பதால்,

பயணிகள் தவிக்கின்றனர். மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில், காலை,

ஷிப்ட் முடிந்து பணிமனைக்கு வரும் பேருந்துகளுக்கும், மதியம், ஷிப்ட்

முடிந்து, இரவு பணிமனைக்கு வரும் பேருந்துகளுக்கும், டீசல் நிரப்பப்படும். போக்குவரத்து

கழகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த, டீசல் விலை உயர்வு காரணமாக, கடந்த சில

தினங்களாக, தனியார், பங்க் களில், மாநகர பேருந்துகள் டீசல்

நிரப்புகின்றன. நெரிசல் நேரம் தவிர, மற்ற நேரங்களில் காலியாக உள்ள,

பங்க்களில் டீசல் நிரப்ப ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும், மதிய நேரத்தில் பெட்ரோல், பங்க்கள் காலியாக இருக்கும்

என்பதால், அந்த நேரத்தில், மாநகர பேருந்துகள், டீசல் நிரப்ப வருகின்றன. குரோம்பேட்டை, அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள, பெட்ரோல், பங்க்கில் டீசல் நிரப்ப, நேற்று மதியம் மாநகர பேருந்துகள் வரிசை கட்டிநின்றன.பயணத்தில் அவசரம் காட்டியவர்களை, நடத்துனர்கள் கீழே இறக்கி, அவ்வழியாக தாம்பரம் சென்ற, மாற்று பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பயணி ஒருவர் கூறுகையில், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில், பேருந்துகளுக்கு டீசல் நிரப்பலாம்.பயணிகளுடன்

பேருந்துகளை பெட்ரோல், பங்க்களுக்கு செல்ல அனுமதிக்க கூடாது.

போக்குவரத்து நெரிசலில், ஏற்கனவே பல மணிநேரம் பயணம் தாமதமாகும் நிலையில்,

பெட்ரோல், பங்க்களிலும் வெகுநேரம் காத்திருப்பது, பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால், ஷிப்ட் முடியும் நேரத்தில் மட்டுமே, டீசல் நிரப்ப வேண்டும், என்றார்.மாநகர

போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பயணிகளுடன் சென்று,

டீசல் நிரப்ப கூடாது என்று ஓட்டுனர், நடத்துனர்களுக்கு

அறிவுறுத்தியுள்ளோம். அவ்வாறு நடந்தால், கண்காணித்து நடவடிக்கை

எடுக்கப்படும், என்றார்.