தேடல்

புலிகள் எண்ணிக்கை உயர்ந்தது

ஈரோடு: சத்திய மங்கலம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், கடந்தாண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 18 புலிகள் இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தார். மேலும், தெங்குமரக்கடா வனப்பகுதியில், மோயார் ஆற்றை ஒட்டி ஏராளமான இதர விலங்குகள் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.