தேடல்

பாலத்தை புதிதாக கட்டக் கோரிபுவனகிரியில் இன்று உண்ணாவிரதம்

புவனகிரி:பழுதடைந்த வெள்ளாற்று பாலத்தை புதியதாக கட்டக்கோரி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க புவனகிரி வெள்ளாற்று பாலப் பாதுகாப்பு குழுவினர் சார்பில் ஒரு நாள் கடையடைப்புமற்றும் உண்ணாவிரத அறப்போராட்டம் இன்று 26ந் தேதி நடக்கிறது.புவனகிரி வெள்ளாற்று பாலம் மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கத்தால் பாலத்தின் ஸ்திர தன்மை நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. இதனால் பாலத்தின் உண்மை தன்மையை உணர்ந்து புதியதாக கட்டித் தரக் கோரி மத்திய, மாநில அரசுக்கு வெள்ளாற்று பாலம் பாதுகாப்பு குழுவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது வரை நடவடிக்கை இல்லை.இந்நிலையில் புவனகிரி வெள்ளாற்று பாலப் பாதுகாப்பு குழுவினர் புவனகிரி பகுதியில் உள்ளஅனைத்து கடைகளிலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்.