தேடல்

பிளஸ் 2 மாணவியை கற்பழிக்க முயற்சி வாலிபரை நையப்புடைத்த பொதுமக்கள்

சென்னை:நள்ளிரவில்

வீடு புகுந்து, பிளஸ் 2 மாணவியை, கற்பழிக்க முயற்சித்த, பட்ட தாரி

வாலிபரை, பொதுமக்கள் நையப்புடைத்து, போலீசில் ஒப்படைத்தனர்.
பெரிய

நொளம்பூரை சேர்ந்தவர் வெங்கடாசலம்,40; இவரது மகள், புரசைவாக்கத்தில் உள்ள,

மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். இந்த மாணவி,பள்ளிக்கு

செல்லும் போதெல்லாம், அதே பகுதியை சேர்ந்த, முதுகலை பட்டதாரி வாலிபர்

பிரகாஷ்,30, பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.நேற்று

முன்தினம், குடிபோதையில் இருந்த அவர், நள்ளிரவில் வீடு புகுந்து,

பெற்றோருடன் உறங்கி கொண்டிருந்த மாணவியை கற்பழிக்க முயற்சித்துள்ளார்.

மாணவி கூச்சலிட்டதால், அவர் ஓட்டம் பிடித்தார். ஆனால், வாலிபரை மடக்கிப் பிடித்த பொது மக்கள், நையப்புடைத்து, போலீசில் ஒப்படைத்தனர்.மாற்றுத்திறனாளியான

கணவர் அம்பிகாபதியால், குடும்ப வருமானத்திற்கு வழியில்லை என்பதால்,

வாலிபரின் தாய் அம்பிகா, பெட்டிக்கடை வைத்து, பிரகாஷை படிக்க வைத்துள்ளார்.

அந்த வாலிபர், வேலைக்கு ஏதும் செல்லாமல், ஊர் சுற்றி வந்த நிலையில்,

இதுபோன்ற கொடுஞ்செயலில் ஈடுபட முயற்சித்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.