தேடல்

பாளை.,இன்ஜி கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்

திருநெல்வேலி:பாளை.,இன்ஜினியரிங் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது.
நெல்லை ரோட்டரி சங்கம், சார்லி பல் ஆஸ்பத்திரி மற்றும் ட்ரூ தொண்டு நிறுவனம் இணைந்து அரசு இன்ஜி.,கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் ரமணி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் புனிதவதனி துவக்கி வைத்தார். மாணவ ரோட்டரி சங்க தலைவர் பிரவீன் குமார் வரவேற்றார். பல் பராமரிப்பு குறித்து பல் டாக்டர் சார்லஸ் பிரேம்குமார் விளக்கி பேசினார்.
முகாமில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ குழுவினர் அனிதா சதீஸ், டாக்டர்கள் யாசர், திவ்யா மற்றும் டாக்டர்கள் குழுவினர் பல் பரிசோதனை செய்தனர்.
முகாமில் கல்லூரி மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை சங்க இயக்குனர் முகமது யூசுப், ட்ரூ தொண்டு நிறுவன மேலாளர் டொமினிக் அன்டொனி செய்தனர்.
முன்னதாக ரோட்டரிசங்கம் சார்பில் சார்லி பல் ஆஸ்பத்திரி டாக்டர் சார்லஸ் பிரேம்குமாருக்கு சிறந்த தொழில் சேவையார் என்ற விருது வழங்கப்பட்டது.