தேடல்

புளியங்குடியில் மனோ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புளியங்குடி:புளியங்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனோ கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

புளியங்குடியை அடுத்த டி.என்.புதுக்குடியில்சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் மனோ கல்லூரி துவக்கப்பட்டது. கல்லூரியில் பி.ஏ., பி.,காம்., பி.எஸ்.சி., உள்ளிட்ட பாடப் பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்லூரியில் புளியங்குடி மற்றும்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.
கல்லூரியில் போதிய பேராசிரியர்கள்இல்லாததால் மாணவ, மாணவிகள்கடந்த சில மாதங்களாகபேராசிரியர்கள் நியமிக்க பல்கலை.,க்குகோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கோரிக்கைகளுக்கு பல்கலை., செவிசாய்க்கவில்லை.

கல்லூரியில் தற்போது 850 மாணவ, மாணவியர் படித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் கல்லூரி துவங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் காலியாக உள்ள பேராசிரியர்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பற்றாக்குறையாக உள்ள ஆங்கிலத்துறைக்கு மூன்று, கம்ப்யூட்டர் துறைகளுக்கு பேராசிரியர்கள்நியமிக்கப்பட வேண்டும். அலுவலக பணிகளை மேற்கொள்ள ஒருவர் மட்டுமே உள்ளார். அவரும் விடுப்பில் சென்றால் கல்லூரியே இயங்காத நிலை ஏற்பட்டுகிறது.

எனவே கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் கல்லூரியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்ககல்லூரியில் ஒரே ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே உள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கம்ப்யூட்டர்கள் வழங்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் நூலகம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுவாக மனோ கல்லூரியில் பணியாற்றும்பேராசிரியர்களுக்கு குறைந்தளவில் சம்பளம் பல்கலை.,மூலம் வழங்கப்படுகிறது.

இதனால் பணிபுரிபவர்கள் இங்கு பணியாற்றிக் கொண்டே மாற்றுபணிகளை தேடி வருகின்றனர். அவ்வாறு மாற்று பணியில் அதிக சம்பளம்கிடைக்கும்போது அங்கு சென்றுவிடுவதாக தெரிகிறது. இதனால் இருக்கின்ற குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கையும் கூடுதலான பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புகளில் நாடிச்செல்லும் இன்றைய நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மட்டுமே கல்வி பயில இதுபோன்ற கல்லூரிகளை நாடுகின்றனர்.

எனவே இக்கல்லூரியில் சுற்றுக்கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் மேல்நிலை வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி பயில்பவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கில வழியில்படிக்க வேண்டிய நிலையும் உள்ளது.

ஆங்கிலத்தையே முதன்மையாக எடுத்து படிக்க வேண்டிய மாணவ, மாணவிகள், இரண்டாம் பாடமாக ஆங்கிலத்தை படிக்கும் பிற மாணவ, மாணவிகளும் போதிய பயிற்சியின்மையால் தேர்வுகளில் வெற்றி பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் கல்லூரியில் செமஸ்டர்தேர்வுகளில் பலர் தோல்விகளையே சந்தித்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். மேலும் இப்பிரச்னை குறித்து பல்கலை.,க்குகல்லூரி தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தொடர்ந்து வரும் செமஸ்டர் தேர்வுகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மாணவ, மாணவியர்கள் கருதுகின்றனர்.

மாணவ, மாணவியர் படும் வேதனையை கண்டு அவர்களது பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர். எனவே பல்கலை., இப்பிரச்னையில் தலையிட்டு மாணவ, மாணவியர்களின் நலன்கருதி கோரிக்கைகளை நிறைவேற்றித்தரும்படி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.