தேடல்

தீபாவளிக்கு கள்ளத்துப்பாக்கி வெடிக்கவில்லை! துப்பாக்கி வெடிக்குமா...? குழப்பத்தில் கோடம்பாக்கம்!!

தீபாவளிக்கு துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி, கும்கி, போடா போடி, அம்மாவின் கைப்பேசி, அஜந்தா, காசிகுப்பம் என இன்னும் ஏகப்பட்ட பெரிய சிறிய படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இன்னமும் இருக்கிறது! ஆனால் இதில் சொற்ப எண்ணிக்கை படங்களே தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்பதுதான் நிஜம் என்கிறது கோடம்பாக்கம்!

ஆடியோ ரிலீஸ் வரை, தீபாவளி ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வந்த கும்கி, தீபாவளி ரேஸில் இல்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. துப்பாக்கி இன்னமும் டைட்டில் உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் சமரசமாகி, சமாதானம் ஏற்பட்டுவிட்டாலும் கூட முழுதாக கோர்ட் தீர்ப்பு வராததால் தீபாவளிக்கு முன்னதாக 9ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு அதன்பின் தீபாவளி 13ம் தேதி ரிலீஸ் என்றாகிவிட்டது.

கள்ளத்துப்பாக்கி தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமானதால் நவம்பர் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போடா போடி பைனான்ஸ் டெபிசீட்டில் சிக்கியுள்ளதாக கேள்வி! அஜந்தா நீண்ட நெடுங்காலமாக தயாரிப்பில் இருந்து ஒருவழியாக தீபாவளிக்கு முன்பாக 9ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் தமிழகம் முழுவதும் ஏராளமான திரையரங்குகளை தங்களது வசம் வைத்திருக்கும் உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நீர்ப்பறவை படம் மற்றும் தீபாவளிக்கு திட்டமிடப்படாத இன்னும் சில படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக ரெடியாகி வருவதாகவும் தெரிகிறது!

நிஜம் தீபாவளி அன்று தான் தெரியும்!!