தேடல்

பேஸ் புக்'கில்முந்தினார் ரகுமான்

புதுடில்லி: பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆகியோரை பின்னுக்கு தள்ளி, பேஸ் புக்கில், அதிகப் படியான ரசிகர்களை கொண்டவராக, தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர். ரகுமான் திகழ்கிறார்.சமூக வலைதளமான, பேஸ்புக்கில், ரகுமானுக்கு ஒரு கோடிக்கும் மேலான ரசிகர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்களின் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் புகைப்படத்துடன், ஒரு கோடி ரசிகர்களுக்கு நன்றி என, ரகுமான் பதில் அளித்துள்ளார்.ரகுமானுக்கு அடுத்தபடியாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, 90 லட்சம் ரசிகர்களும், இந்தி நடிகர் சல்மான் கானுக்கு, 70 லட்சம் ரசிகர்களும் உள்ளனர். அதே நேரத்தில், அமிதாப் பச்சனுக்கு, 30 லட்சம் ரசிகர்களே உள்ளது, தெரியவந்துள்ளது.