தேடல்

மகளிர் குழு பொருட்கள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை

சென்னை : மகளிர் சுய உதவி குழுவினர், உற்பத்தி பொருள்கள் கண்காட்சியில், 11 லட்சம் ரூபாய்க்கு, பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பொங்கல்

பண்டிகையையொட்டி, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில்,

மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி பொருள்களின் கண்காட்சி,

நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடக்கிறது.
மூன்று

கட்டங்களாக நடக்கும் இந்த கண்காட்சியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த,

மகளிர் சுய உதவி குழு பெண்கள், தங்கள் பொருள்களை காட்சிப்படுத்தி

வருகின்றனர்.
முதல் கட்ட கண்காட்சி, கடந்தாண்டு டிச., 20 முதல், 30ம்

தேதி வரை நடந்தது. இதில், அரியலூர், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம்,

நாமக்கல், தேனி, திருப்பூர் உள்ளிட்ட, 11 மாவட்டங்களை சேர்ந்த, மகளிர் சுய

உதவி குழுவினர், தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தினர். முதல் கட்ட

கண்காட்சி, கடந்த, 30ம் தேதியோடு முடிவடைந்தது. இதில், 11.65 லட்சம் ரூபாய்

மதிப்புள்ள, பொருள்கள்
விற்பனையாகின.
இரண்டாம் கட்ட கண்காட்சி,

கடந்தாண்டு டிச., 31 முதல் வரும், 11ம் தேதி வரை நடக்கிறது. இதில், கடலூர்,

தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம்
உள்ளிட்ட, 10 மாவட்டங்களை சேர்ந்த, மகளிர்
சுய உதவி குழுக்கள், தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
மண்பாண்ட

விளக்குகள், பனை ஓலை பொருட்கள், தேங்காய் நார் பாய்கள், கிளிஞ்சல்

பொருட்கள், பத்தமடை பாய்கள், சணல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள்

உள்ளிட்டவை, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.