தேடல்

மனித சங்கிலி போராட்டம்

சேலம்: சேலத்தில், பாலியல் வன்முறைக்கு எதிராக, மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் விதத்தில், கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
பாலியல் குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனையை விரைவாக வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமையால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, சேலம் வள்ளுவர் சிலை அருகில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சேலம் மாவட்ட செயலாளர் ராஜாத்தி தலைமையில், 200க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.