தேடல்

மனாடெக் சார்பில் ரத்ததான முகாம்

புதுச்சேரி:மனாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில், இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது.
மனாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 25ம் ஆண்டு விழா மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் மணநாதன் பிறந்த நாளை முன்னிட்டு, கரிக்கலாம்பாக்கத்தின் உள்ள தொழிற்சாலையில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடந்தது.
முகாமை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார். மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் குழுவினர் பரிசோதனைகள் செய்து ஆலோசனை வழங்கினர்.
புதுச்சேரி ஷரான் சொசைட்டி மற்றும் ஜிப்மர் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய ரத்த தான முகாமில், 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் மனாடெக் நிறுவன இணை நிர்வாக இயக்குனர் கலைச்செல்வன், இயக்குனர் (உற்பத்தி) விஜயராகவன், ஷரான் சொசைட்டி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.