தேடல்

மனைவி இறந்த துக்கத்தில்முதியவர் தற்கொலை

சென்னை:மனைவி

இறந்த துக்கம் தாளாத முதியவர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து

கொண்டார்.எண்ணூர் பாரதியார் நகரில் வசித்தவர் ஆவடிசாமி, 87; இவரின் மனைவி

வள்ளியம்மாள், 80. இவர்களுக்கு, நான்கு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

ஆவடிசாமியும், வள்ளியம்மாளும் தனியே வசித்தனர்.நான்கு நாட்களுக்கு முன்,

வள்ளியம்மாள் திடீரென இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாத

ஆவடிசாமி, வீட்டு மின் விசிறியில் நேற்று, தூக்கிட்டு தற்கொலை செய்து

கொண்டார்.சம்பவம் குறித்து, எண்ணூர் போலீசார் விசாரிக்கின்றனர்.