தேடல்

மனைவியை துன்புறுத்தியகணவன் சிறையில் அடைப்பு

அண்ணா நகர்:வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு, மனைவியை அடித்து துன்புறுத்தியகணவனை, போலீசார் கைது செய்தனர்.
அரும்பாக்கம்,

ஜெகநாத நகர், 2வது தெரு, முதன்மை சாலையில் வசிப்பவர்கள், சுரேஷ், 35,

பாக்கியலட்சுமி, 30. வந்தவாசியை அடுத்துள்ள மாவல்வாடி கிராமத்தை பூர்வீகமாக

கொண்ட இவர்களுக்கு, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்,திருமணம் நடந்தது;

குழந்தையில்லை.தனியார் இன்னிசை குழு ஒன்றில், ஆடியோ
டெக்னீஷியனாக

பணிபுரிந்து வந்த சுரேஷுக்கு, வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு

ஏற்பட்டது.இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, குழந்தையில்லாத உன்னுடன் வாழ

முடியாது என, மனைவியிடம் கூறி, அவரை அடித்து துன்புறுத்திவந்துள்ளார்

சுரேஷ். மேலும், அதிக வரதட்சணையும் கேட்டு, துன்புறுத்தி

உள்ளார்.இதுகுறித்து, பாக்கியலட்சுமி கொடுத்த புகாரை அடுத்து, அண்ணா நகர்

அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சுரேஷை கைது செய்து, சிறையில்

அடைத்தனர்.