தேடல்

மயக்க சுவீட் கொடுத்து நகை மோசடி

மதுரை : மதுரை

தபால் தந்திநகரை சேர்ந்தவர் பாண்டி, 71. ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.,

அதிகாரி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரிடம், நிலம் வாங்குவது

தொடர்பாக, விருதுநகர் நபர் ஒருவர் மொபைலில் பேசி, மேலசித்திரை வீதியில்

உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற பாண்டிக்கு விபூதி மற்றும்

பிரசாதம் எனக்கூறி, மயக்க சுவிட் கொடுத்தார். மயங்கிய பாண்டியிடமிருந்து

14 பவுன் நகையை எடுத்து தப்பினார். அறையில் தங்கியவர் ராஜபாளையம் கண்ணன்,

என முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திலகர்திடல் போலீசார்

விசாரிக்கின்றனர்.