தேடல்

மருத்துவமனையில் கவிஞர் வாலி

கவிஞர் வாலிக்கு, சில தினங்களுக்கு முன், கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவர், சிகிச்சைக்காக, சென்னை, கிரீம்ஸ் சாலை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில், இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின், நேற்று, பொது வார்டிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு, சளி, காய்ச்சல் இருப்பதால், இன்னும் சில நாட்கள், மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்படும் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.