தேடல்

மருத்துவமனையிலிருந்து மலாலா டிஸ்சார்ஜ்

லண்டன்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி, மலாலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் பெண் கல்விக்காக பாடுபட்டு வந்த 15 வயது சிறுமி மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானில் சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக பிரிட்டனில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மலாலா, குணமடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் என்ற இடத்தில் தனது பெற்றோருடன் தங்கியுள்ளார். இந்த நிலையில், மலாலாவுக்கு இன்னும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.