தேடல்

மலைவாழ் மக்களுக்குஉறுப்பினர் கல்வி திட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பையனபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினர் கல்வித்திட்டம் நடத்தப்பட்டது.சங்க செயலாளர் சந்திரமவுலி வரவேற்றார். தனி அலுவலர் முத்துச்சாமி தலைமை வகித்து பேசுகையில், தாளவாடி பையனபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உறுப்பினர்களுக்கு, 14 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.தொடர்ந்து, மூன்று ஆண்டாக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.அனைத்து கடன்களும், நூறு சதவீத வசூல் செய்துள்ளது, என்றார்.பையனபுரம் பஞ்சாயத்து தலைவி ராணி முன்னிலை வகித்து, மரக்கன்றுகளை நடவு செய்தார்.அரசின் திட்டங்கள் குறித்து, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் செங்கோடப்பனும், கூட்டுறவு கடன் திட்டங்கள் குறித்து, கூட்டுறவு பிரச்சார அலுவலர் ஆனந்தராஜூம் பேசினர்.எழுத்தர் பழனியம்பாள் நன்றி தெரிவித்தார்.