தேடல்

மொகாலி ஒருநாள்: இங்கிலாந்து 138/3

மொகாலி: இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 35 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில், இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது ஒருநாள் மொகாலியில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் துவக்க வீரர் ரகானே நீக்கப்பட்டு ரோகித் சர்மா இடம் பிடித்தார். இங்கிலாந்து அணியில் கீஸ்வெட்டருக்கு பதில் ஜோஸ் பட்லர் வாய்ப்பு பெற்றார்.இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக், பெல் ஜோடி நிதான துவக்கம் தந்தது. பெல் 10 ரன்கள் எடுத்தபோது இஷாந்த் வேகத்தில் அவுட்டானார். இங்கிலாந்து அணி 35 ஓவரில் 3 விக்கெட்க்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. குக் (76), மார்கன் (3) அவுட்டானார்கள். பீட்டர்சன் (39) அவுட்டாகாமல் இருந்தார்.