தேடல்

முடிந்தால் அரசை கவிழத்துப்பாருங்கள்: சந்திரசேகரராவிற்கு முதல்வர் சவால்

ஐதராபாத்: முடிந்தால் எனது ஆட்சியை சந்திரசேகரராவ் கவிழ்த்து பார்க்கட்டும் என முதல்வர் கிரண்குமார் ரெட்டி சவால் விடுத்துள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா ‌மாநிலம் உருவாக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன.மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தெலுங்கானா பிரச்னைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும்‌ என்றார். ஆனால் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதில் ஏமாற்றம் அடைந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி உள்ளிட்ட தெலுங்கானா ஆதரவு அமைப்புகள் தொடர் போராட்டத்தை துவக்கியுள்ளன.இந்நிலையில் காங். முதல்வர் கிரண்குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒரு மித்த கருத்து எட்டப்பட வேண்டும். இதற்காக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி கட்சி தெருவில் போராட்டம் நடத்தினால் நிறைவேறிவிடுமா. தெலுங்கானா பகுதியில் காங். செல்வாக்குடன்தான் உள்ளது. ‌எனது த‌லைமையிலான ஆட்சியை அவரால் கவிழ்க்க முடியாது. முடிந்தால் முயற்சி செய்யட்டும், மாநிலத்தில் மிகவும் வலுவாக உள்ளது காங். அரசு. இவ்வாறு அவர் கூறினார்.