தேடல்

மாணவர்களை மாவோயிஸ்டுகளுடன் ஒப்பிட்ட உள்துறை அமைச்சர்

புதுடில்லி: மாணவர்கள் போராட்டத்தை மாவோயிஸ்டுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவிக்கு ஆதரவாக டில்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போலீசாரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, போலீசார் நடத்திய தடியடி குறித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டனம் வருகிறது. ராஷ்டிரபதி பவன், நாட்டின் பெருமைமிகு இடம். இதற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தாலும் மக்கள் எங்களை கேள்வி கேட்பார்கள். மேலும், போலீசார் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். 18 போலீசார் காயமடைந்துள்ளனர். அதை தடுக்கவே போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரிவித்தார். மேலும், மாணவர்களுடன் உள்துறை அமைச்சர் ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கேள்வி கேட்பது ஈஸி., நாளை பா.ஜ.,வினரோ அல்லது மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடனோ போராட்டம் நடத்தினால் அவர்களுடன் எல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். ஷிண்டேவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.