தேடல்

மாணவிக்கு பல்வேறு நாடுகளில் அஞ்சலி

வாஷிங்டன்:சிங்கப்பூரில் மரணமடைந்த மருத்துவ மாணவிக்கு பல்வேறு நாடுகளில் வசிக்கும்இந்திய வம்சாவளியினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் காந்தி சிலை அருகே இந்தியாவம்சாவளியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மாணவி உண்மையான இந்தியா நாயகி என பலர் புகழாரம் செலுத்தினர். இந்தியாவில் வாழும் பெண்கள் அதிகம் பேர்பயத்துடன் வசிப்தாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே போல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய தூதரகம் முன்புஏராளமான இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கூடினர். அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர்.குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.