தேடல்

மாணவியின் மரணம் இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றும்: பெற்றோர்கள் நம்பிக்கை

கோலாலம்பூர்:மருத்துவ மாணவியின் மரணத்தால் பெரும் சோகத்தில் உள்ள அப்பெண்ணின் பெற்றோர், இந்த மரணம், பெண்களுக்கு பாதுகாப்பான நாடாக இந்தியாவை மாற்றும் என நம்பிக்கையுடன் உள்ளதாக சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ராகவன் கூறியுள்ளார். மேலும் அவர், பல இடங்களிலிருந்துபெற்றோர்களுக்கு ஆதரவு தெரிவித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளதாகவும், தங்கள் மகளின் மரணம், டில்லியிலும் மற்ற பகுதிகளிலும் பெண்களுக்கு சிறப்பான எதிர்காலத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் என பெற்றோர்கள் நம்புவதாக அவர் கூறினார்.