தேடல்

மாநில கல்லூரியில் சோதனை மூன்று அரிவாள்கள் பறிமுதல்

சென்னை : மாநில கல்லூரி வளாகத்தில், நேற்று போலீசார் நடத்திய சோதனையின் போது, மூன்று அரிவாள்கள் கைப்பற்றப்பட்டன.மாநில கல்லூரி மாணவர்களிடையே சமீபத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. மோதலின் உச்ச கட்டமாக, மூன்று மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த கொடூர செயலின் தொடர்ச்சியாக, பழிக்கு பழி வாங்க, கல்லூரி வளாகத்தில், மாணவர்கள் சிலர், சதி ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தகவல் அறிந்தஅண்ணா சதுக்கம் போலீசார், நேற்று கல்லூரி வளாகத்தில் சோதனையிட்டுமூன்று அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர்.இது தொடர்பாக, பி.காம்., இரண்டாம் ஆண்டு மாணவர் கோபிநாத், 19, பி.எஸ்.சி., முதலாமாண்டு மாணவர் சீனிவாசலு, 19, ஆகியோரிடம்
விசாரிக்கின்றனர்.இதுகுறித்து மாநில கல்லூரி முதல்வர்சபாநாயகம் கூறியதாவது:
இச்சம்பவம் தொடர்பாக, மாணவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்படும். பாதுகாப்பு கருதி, சிதிலமடைந்துள்ள கல்லூரி சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு, அதன் உயரமும் அதிகரிக்கப்படுகிறது. கல்லூரிக்கு தொடர் போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே,மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு சபாநாயகம் கூறினார்.