தேடல்

மீன் வளர்ப்பு பண்ணைகளுக்கு 50 சதவீத மானிய பொருட்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மீன் குஞ்சு பண்ணைகளுக்கு, தேசிய வேளாண்
அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ,50 சதவீத மானியத்தில் மீன் குஞ்சுகள், தீவனங்கள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில்

உள்ள தனியார் மீன் குஞ்சு பண்ணைகளுக்கு, நுண் மீன் குஞ்சுகள் மற்றும் மீன்

தீவனங்கள் வாங்க, 50 சதவீத மானியம் அரசு வழங்க உள்ளது. இத்திட்டத்தின்

கீழ், தனியார் மீன் குஞ்சு பண்ணையாளர்கள் மீன்களை அதிகரித்து, மீன்

வளர்ப்பினை ஊக்குவிப்பதுடன், மீன் குஞ்சு தேவையை நிறைவு செய்ய முடியும்.
மானியம் பெற பண்ணையாளர்கள், 2 எக்டேர் பரப்பளவில், மீன் குஞ்சு
பண்ணைகள் இருக்க வேண்டும்.
2012 ம் ஆண்டுக்கு முன்னர் அமைக்க பட்டிருக்க வேண்டும். மாவட்ட
நன்னீரில் மீன் வளர்ப்போர் முகமை உறுப்பினராக இருக்க வேண்டும்.
நல்

நீர் வளம், நீராதாரம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் மீன்

குஞ்சு பண்ணையாளர்கள் எக்டேருக்கு ஒரு லட்சம் மதிப்பில், உள்ளீட்டு

பொருட்கள் மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மீன் குஞ்சு உற்பத்தி

அதிகரித்து, மீன் உற்பத்தி வெகுவாக உயர்ந்து,விவசாயிகள் வாழ்வாதாரம் உயர

வழி வகுக்கும். மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையாளர்கள், மீன் வள உதவி

இயக்குனர் அலுவலகம், (உள்நாட்டு மீன் வளம்) விருதுநகர், 130 ராஜாமணி ஹால்,

அருப்புக்கோட்டை ரோடு, விருதுநகர், போன் 04562 244 707 தொடர்பு கொள்ளலாம்

என, கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.