தேடல்

மும்பை அணியில் மாற்றமில்லை

மும்பை:ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பைனலில் விளையாட உள்ள மும்பை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனல், ஜன. 26ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. இதில் மும்பை, சவுராஷ்டிரா அணிகள் மோத உள்ளன. இதற்கான மும்பை அணி, நேற்று அறிவிக்கப்பட்டது. டில்லியில் நடந்த சர்வீசஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்கள், பைனலிலும் விளையாடுவார்கள் என, மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) தெரிவித்தது.முன்னதாக மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, அஜின்கியா ரகானே ஆகியோர் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,), எம்.சி.ஏ., கோரிக்கை வைத்தது. இவர்கள் இருவரும், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருவதால், பி.சி.சி.ஐ., அனுமதி மறுத்தது. இந்நிலையில் அதே வீரர்களை கொண்டு விளையாட மும்பை அணி முடிவு செய்தது. தவிர, காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் பங்கேற்கவில்லை.இதுகுறித்து எம்.சி.ஏ., இணை செயலாளர் நிதின் தலால் கூறுகையில், ரோகித், ரகானே ஆகியோருக்கு அனுமதி கிடைக்காததால், அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்கள், பைனலிலும் பங்கேற்பார்கள், என்றார்.அணி விவரம்: அஜித் அகார்கர் (கேப்டன்), சச்சின், வாசிம் ஜாபர், சூர்யகுமார் யாதவ், தவால் குல்கர்னி, அபிஷேக் நாயர், கவுஸ்துப் பவார், ஹிகன் ஷா, ஆதித்யா தாரே, அன்கித் சவான், நிகில் பாட்டீல், ஜாவத் கான், சுஷாந்த் மராத்தே, ஷர்துல் தாகூர், விஷால் தபோல்கர்.பயிற்சியாளர்: சுலக்ஷன் குல்கர்னி.