தேடல்

மும்பை தாக்குதல்: குற்றவாளி ஹெட்லிக்கு மரண தண்டனை தேவை இல்லை அமெரிக்க அரசு வாதம்

வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் ‌குற்றவாளியான டேவிட் ஹெட்லிக்கு மரண தண்டனை தேவை இல்லை என அமெரிக்‌க அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான பல தகவல்களை அமெரிக்க அரசுக்கு ஹெட்லி வழங்கி உள்ளதால் அவரை அவருடைய சொந்த நாடான பாகிஸ்தானுக்கோ, இந்தியாவுக்கோ அனுப்ப முடியாது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


சிகாகோவில் விசாரணை: @@கடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு சதி திட்டம் தீட்டி உடந்தையாக இருந்த ஹெட்லி அமெரிக்காவில் பிறந்த பாகிஸ்தானியர். சிகாகோ நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் நேற்று அரசு தரப்பு வழக்கறிஞர் ‌வாதிடும்போது, ஹெட்லி கொடுத்த தகவல் அடிப்படையில்தான் ராணாவுக்கு தண்டனை வழங்க முடிந்தது. அமெரிக்க புலனாய்வுத்துறைக்கு அவர் தேவையான பல தகவல்களை அளித்ததோடு மட்டுமல்லாமல், சமீபத்தில் இந்திய அதிகாரிகள் அவரை விசாரித்தபோதும், எவ்வித தயக்கமும் இன்றி பல பயனுள்ள தகவல்களைக் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் அமெரிக்க சட்டப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கலாம். ஆனால் அவர் பயங்கரவாத இயக்கமான லஷ்கர்- இ- தொய்பா குறித்து பல தகவல்களைக் கொடுத்துள்ளார். மேலும் பல பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பாகவும் கூறியிருக்கிறார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இயக்கத் தலைவர் சாஜித் மிர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ய வழி ஏற்பட்டுள்ளது. மும்பை தாக்குதலை வழி நடத்திய மற்றும் அதற்கு பயிற்சி அளித்தவர்கள் குறித்தும் ஹெட்லி தகவல்கள் கொடுத்துள்ளார்.
மரண தண்டனை இல்லை:@@ இவ்வாறு அவர் கொடுத்த ஒத்துழைப்பு அடிப்படையில் ஹெட்லிக்கு மரண தண்டனை தேவை இல்லை என்ற முடிவுக்கு அமெரிக்க அரசு வந்துள்ளது. மேலும் அவர‌ை பாகிஸ்தானுக்கோ, இந்தியாவுக்கோ அனுப்பும் எண்ணமும் இல்லை. இந்தியா விரும்பினால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர‌ை விசாரித்துக் கொள்ளலாம் என்றார்.