தேடல்

மும்பை தாக்குதல் வழக்கு: ராணாவுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை அமெரிக்க கோர்ட் தீர்ப்பு

சிகாகோ: மும்பை தாக்குதலுக்கு, சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதி டேவிட் கோல்மேன் ஹெட்லியின் கூட்டாளி, தகவுர் ராணாவுக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனைவிதித்து சிகாகோ கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.மும்பையில், 2008, நவம்பரில், தாக்குதல் நடத்திய, அஜ்மல் கசாப்புக்கு, கடந்த ஆண்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தவர், அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான ஹெட்லி; இவருடைய கூட்டாளி, தகவுர் ராணா.மும்பை தாக்குதலில் பலியான, 166 பேரில், ஆறு பேர் அமெரிக்கர்கள். பலியானவர்களின் உறவினர்கள், இது தொடர்பாக, அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, அமெரிக்க போலீசார், சிகாகோ நகரில், ஹெட்லியையும், அவரது கூட்டாளி ராணாவையும் கைது செய்தனர்.மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததை, ஹெட்லி ஒப்புக் கொண்டதால், அவருக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், டென்மார்க் நாட்டின், பத்திரிகை அலுவலகத்தை, வெடிகுண்டு வைத்து தகர்க்க, சதி செய்தது தொடர்பாக, ராணா மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று,இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்பு கூறிய சிகாகோ கோர்ட், ராணாவுக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு கூறியது.