தேடல்

மியான்மர், ஆஸ்திரேலியா செல்கிறார் அந்தோணி

புதுடில்லி:பாதுகாப்பு தொடர்பான உறவுகளை வலுப்படுத்த மியான்மர், ஆஸ்திரேலியா நாடுகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி செல்ல உள்ளார். வரும் ஜனவரி 22-23 ஆகிய நாட்களில் மியான்மரில் முதல்முறையாகசுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அப்போது மியான்மர் விமான படைக்கு பயிற்சி அளிக்க இந்தியா ஒத்துக்கொள்ளும் என தெரிகிறது.மேலும் ராணுவ பயற்சி தொடர்பான மையங்களில்மியான்மர் ராணுவத்தினரையும் சேர்க்க இந்தியா ஒத்துக்கொள்ளும் என தெரிகிறது. மியான்மர் பயணத்திற்கு பின்னர் பிப்ரவரி மாதத்தில் அந்தோணி ஆஸ்திரேலியா செல்கிறார். அப்போது இரு தரப்பு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.