தேடல்

மதுரை எஸ்.ஐ., சம்பள பணம் கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவு

மதுரை : கடன் வாங்கிய தொகையை, திருப்பி செலுத்தாத, எஸ்.ஐ., தனது மாத சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை, கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
செல்லூர் சுயராஜியபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், 65, மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
புதூர்

சர்வேயர் காலனியை சேர்ந்த கருப்பையா, 55, தல்லாகுளம் போக்குவரத்து

எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார். 2009ல், அய்யனார் என்ற ஆட்டோ டிரைவர், இவரை

அறிமுகப்படுத்தி, கருப்பையாவின் மகன் இன்ஜினியரிங் படிக்க ரூ.5 லட்சம் கடன்

வாங்கி கொடுத்தார். இதற்கு ரூ.100க்கு 2 வட்டியுடன் திருப்பித்தர,

ஆவணங்களில் கையெழுத்திட்டார். ஆனால், பணம் கொடுக்கவில்லை.
இந்நிலையில்,

அய்யனாருக்கு மோசடி வழக்கில் தொடர்பிருந்தால், பணம் கிடைக்காது, என கருதி

பணத்தை 6 சதவீத வட்டியுடன் ரூ.8.5 லட்சம் தரவேண்டும் என மனுவில்

தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்த

நிலையில், பன்னீர்செல்வம் இடைக்கால உத்தரவு கேட்டு மனு செய்தார். அதில்

எஸ்.ஐ., கருப்பையா விரைவில் பணி ஓய்வு பெற உள்ளார். அசையா சொத்துகள்

அவரிடம் உள்ளன. அவரிடம் உள்ள ரூ.9 லட்சம் மதிப்பிலான சொத்தையும், மாத

சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கையும் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும், என

மனுவில் குறிப்பிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி குருவையா, கருப்பையாவின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு மாதம் ரூ.10,333 கோர்ட்டில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.