தேடல்

மேற்குவங்கத்தில் மாஜி அமைச்சர் மீது தாக்குதல்

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் மீது திரிணாமுல் காங். கட்சியினர் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார். மேற்குவங்க மாநிலத்தில் முன்னர் இடது சாரிகள் ஆட்சியின் போது அமைச்சராக இருந்த ரீசாக் முல்லாஹ் என்பவர் இவர்தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்க்பூர் நகரில் உள்ள கட்சியின் அலுவலகம் மீது சிலர் தாக்குதல் நடத்துவதாக அறிந்து அங்கு காரில்‌ சென்றார். அப்போது அவரை வழிமறித்த சிலர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார்.இது தொடர்பாக போலீசில் புகார் கூறப்பட்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரபூல் இஸ்லாம் என்ற எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ‌போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.