தேடல்

மேலகரத்தில் ரூ.90 லட்சத்தில் மின் தகனம் அமைக்க அரசுக்கு பரிந்துரை

தென்காசி:மேலகரத்தில்

90 லட்சம் ரூபாய் செலவில் மின் தகனம் அமைக்க அரசுக்கு பரிந்துரை

செய்யப்பட்டுள்ளது என டவுன் பஞ்.,தலைவர் பாலசுப்பிரமணியன்

கூறினார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மேலகரம் டவுன் பஞ்.,

பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வர்

ஜெயலலிதா அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் மேலகரம் பகுதியில் உடனுக்குடன்

நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் மேலகரம் பகுதியில் 200

பேருக்கு முதியோர் பென்சன் வழங்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா

ஆட்சியில் இதுவரை 650 பேருக்கு முதியோர் பென்சன் வழங்கப்பட்டுள்ளது. டவுன்

பஞ்.,பொது பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட இடங்கள் கம்பி வேலி அமைத்து பட்டா

பெற்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சீரான குடிநீர்

வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுகாதாரம் பேணப்படுகிறது.கடந்த ஆண்டு

பொது நிதியில் இருந்து 71 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் சாலைகள்,

வடிகால், குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகர்பு

மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 47 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம்,

சாலை வேலைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் டிப்பர் லாரி வாங்கப்பட்டுள்ளது.எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாயில் பொது

நூலகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.சுற்றுச்சூழல்

பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி நிதியில் ருந்து

20 லட்சம் ரூபாய் செலவில் குடியிருப்பு ராயர் தோப்பு பகுதியில் பிளாஸ்டிக்

சாலை அமைக்கப்பட்டுள்ளது. நபார்டு திட்டத்தில் ராஜகுலராமபேரி குளம்

மேம்பாடு செய்ய 85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து

வருகிறது. 2வது வார்டு முப்புடாதியம்மன் கோவில் தெரு மற்றும் 10வது வார்டு

அருந்ததியர் காலனி காளியம்மன் கோவில் தெருவில் 24 லட்சம் ரூபாய் செலவில்

சுகாதார வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது.குடியிருப்பு அங்கன்வாடி

மையத்தில் 18 ஆயிரம் ரூபாய் செலவில் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. 100

சோடியம் பல்புகள் அடர்மின் விளக்குகளாக (சிஎப்எல்) மாற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திறந்த வெளி கழிப்பிடம் ஒழிக்கும் திட்டத்தின் கீழ் 24 லட்சம்

ரூபாய் செலவில் 6 மற்றும் 9வது வார்டுகளில் சுகாதார வளாகம் அமைக்க டெண்டர்

கோரப்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் செலவில் தனி குடிநீர் திட்டம்

செயல்படுத்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பொது நிதியில் இருந்து தார்

சாலை அமைக்க 36 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும், குடிநீர் பணிகள் மேற்கொள்ள 8

லட்சத்து 76 ஆயிரம் ரூபாயும், வடிகால் பணிகளுக்கு 19 லட்சத்து 45 ஆயிரம்

ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலகரத்தில் 90 லட்சம் ரூபாய்

செலவில் மின் தகனம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.டவுன்

பஞ்.,பகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள கவுன்சிலர்கள்

ஒத்துழைப்பு வழங்க மறுத்தால் மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களிடம்

கோரிக்கை மனுக்கள் பெற்று வளர்ச்சி பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சி பாகுபாடின்றி வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு

டவுன் பஞ்.,தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.பேட்டியின் போது டவுன் பஞ்.,

நிர்வாக அதிகாரி சுந்தரராஜன் உடனிருந்தார்.