தேடல்

முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பின் திருவுருவாம், கருணையின் வடிவமாம் இயேசு பிரான் அவதரித்த நன்னாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாம் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும், இயேசு பிரானின் உயரிய நெறியைப் பின்பற்றி பகைவரிடத்திலும் அன்பு காட்டி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ இந்த இனிய நாளில் உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.