தேடல்

மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,ஜெகன் கட்சியில் இணைந்தார்

ஐதராபாத்: ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காக்கி நாடா தொகுதி, காங்கிரஸ், எம்.எல்.ஏ., நேற்று, ஒ.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியில்இணைந்தார். ஆந்திராவில்,ஆளும் காங்கிரஸ் கட்சிக்குநெருக்கடி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.குறிப்பாக,ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியால்,தொடர் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள்,ஒய்.எஸ்.ஆர்., - காங்., தலைவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். பலர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஜெகன் கட்சியில்இணைந்து வருகின்றனர்.அந்த வகையில், நேற்று, காக்கி நாடாவை சேர்ந்த, காங்., - எம்.எல்.ஏ., துவரம்புடி சந்திரசேகர் ரெட்டி, கட்சியின் கவுரவ தலைவரும், மறைந்த முதல்வர், ராஜசேகர ரெட்டியின் மனைவியுமான, விஜயம்மாவைச் சந்தித்து, கட்சியில் முறைப்படி இணைந்தார். கடப்பா தொகுதி, எம்.பி,யும், ராஜசேகர ரெட்டியின் மகனுமான, ஜெகன் மோகன் ரெட்டியின் விசுவாசியான,சந்திரசேகரின் இந்த நடவடிக்கை, எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.அவர் நிருபர்களிடம் கூறுகையில், என் தொகுதியான காக்கிநாடாவின் வளர்ச்சிக்கு, முதல்வர் கிரண்குமார், உறுதியளித்தபடி எதுவும் செய்யவில்லை.மக்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை அரசு எடுத்து வருகிறது.சமீபத்தில் மின் கட்டண உயர்வு, மிகவும் கடுமையாக இருந்தது. இது, மக்களை வெகுவாக பாதித்துள்ளது, என்றார்.ஆந்திர சட்டசபையில், காங்கிரஸ் கட்சியின் பலம்,149 ஆக இருந்தது;இவரது விலகலால், 148 ஆகியுள்ளது. ஒரு எம்.எல்.ஏ., கட்சி மாறினால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், அவர் பதவி பறிக்கப்படும். சந்திரசேகர ரெட்டி மீது, எப்போது நடவடிக்கை என்பது, விரைவில் தெரிய வரும்.