தேடல்

தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை

ஆவடி

: தாய் கண்டித்ததால், மனமுடைந்த மகள், தூக்கு போட்டு தற்கொலை செய்து

கொண்டார். ஆவடி நந்தவனமேட்டூர், சிவாஜி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண

மூர்த்தி; இவரது மகள்சசிகலா, 18. இவர், டிவியில், மெகா தொடர்

நாடகத்தை பார்க்கும் ஆர்வத்தில், வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்து

விட்டார்.தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அவரது தாய் உமா மகேஸ்வரி,

மாலையில்வீட்டுக்கு வந்ததும்,மகளை திட்டியுள்ளார்.இதனால் மனமுடைந்த

சசிகலா, என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை. அதனால் எனக்கு வாழ

பிடிக்கவில்லை என, கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கு போட்டு தற்கொலை

செய்து கொண்டார். இதுகுறித்து, ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.