தேடல்

தியேட்டரில் பெண் வக்கீலுக்கு"பளார்' விட்ட வக்கீலுக்கு தர்மஅடி

திருவண்ணாமலை:சினிமா தியேட்டரில், திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி, பெண் வக்கீல் கன்னத்தில் அறைந்த மற்றொரு வக்கீலுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திருவண்ணாமலை அடுத்த, சோ.நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் ஆர்த்தி, 24. இவர் கடந்த, 26ம் தேதி திருவண்ணாமலை, மேற்கு கோபுர தெருவில் உள்ள சக்தி தியேட்டரில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்.இடைவேளையின் போது, அங்கு வந்த திருவண்ணாமலை, பாவாஜி நகரை சேர்ந்த சிவா, 30, என்ற வக்கீல், தன்னை திருமணம் செய்ய வேண்டும் என ஆர்த்தியை மிரட்டியதோடு, அவரது கன்னத்தில் அறைந்து விட்டு வெளியேறினார்.தியேட்டரில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள், சிவாவைமடக்கிப் பிடித்து தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.ஆர்த்தி கொடுத்த புகார்படி, திருவண்ணாமலை போலீஸார் விசாரிக்கின்றனர்.