தேடல்

யாருடன் கூட்டணி ? தே. மு. தி.க., நாளை முக்கிய முடிவு

சென்னை : எந்த கட்சியினருடனும் ஒட்டும் இல்லாமல், உறவும் இல்லாமல் இருந்து வரும் விஜயகாந்த் தலைமையிலான தே. மு. தி.க., வின் செயற்குழு நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் எனற கேள்விக்கு முடிவு எடுக்கலாம் என தெரிகிறது.

விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வின் 8-வது செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு கூடுகிறது. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து பிரிவு நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் தற்போதைய அரசியல் நிலவரம், விலைவாசி உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் மற்றும் பாராளு மன்ற தேர்தலை சந்திப்பது, கூட்டணி பற்றி முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.