தேடல்

ரஜினி, விஷாலைத் தொடர்ந்து இமயமலைக்கு சென்ற விக்ரம்பிரபு!

கும்கி படத்தில் அறிமுகமானவர் சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபு. அதையடுத்து எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் இவன் வேற மாதிரி என்ற படத்தில் ஆக்சன் கதையில் நடித்து முடித்து விட்ட அவர், அடுத்து தூங்காநகரம் படத்தை இயக்கிய கெளரவ் இயக்கும் சிகரம் தொடு என்ற படத்தில் நடித்து வருகிறார். மோனல் கஜார் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வித்தியாசமான காதல் கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இமயமலையிலுள்ள ஹரித்துவார் சண்டித்தேவி கோயிலில் தொடங்கி அங்குள்ள உயரமான பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை 10 நாட்களுக்குள் நடத்தி விட்டு பின்னர், அங்கிருந்து சென்னை திரும்புகிறார்களாம்.

ஆக, ரஜினி அமைதிக்காக இமயமலை சென்றார். விஷால் சுற்றிப்பார்க்க சென்றார். விக்ரம்பிரபுவோ படப்பிடிப்புக்காக இமயமலைக்கு சென்றுள்ளார்.