தேடல்

ரயில் இன்ஜி்னில் டிரைவர்களுக்கு டாய்லட் வசதி

புதுடில்லி: நாட்டில‌ேயே முதன் முறையாக ரயில் ஓட்டுனர்களுக்கு பயன்படும் வகையில் இன்ஜினில் டாய்லட் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறியதாவது:

தற்போதுள்ள ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே டாய்லெட் வசதி உள்ளது. ரயிலை ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் ரயில் நிறுத்தும் நிலைங்களில் மட்டுமே பயன்படு்த்தும் நிலை உள்ளது. உ.பி.,மாநிலம் லக்னோவில் உள்ள தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாய்லட் வசதி கொண்ட இன்ஜின் நீண்ட தொலைவிற்கு செல்லும் ரயில்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ராஜ்தானி, உட்பட அதிக நிறுத்தம் இல்லாத ரயில்களில் டிரைவர்களுக்கு மி க பயனுள்ளதாக அமையும்.

மேலும் 3 ஆயிரத்து 30 0குதிரை சக்தி திறனுக்கு மேற்பட்ட ‌ரயில் இன்ஜின்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனவும். இத்திட்டம் நாட்டின் மற்ற பகுதிகளில் சென்று கொண்டிருக்கும் நெடுந்தொலைவு ரயில்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.