தேடல்

உருக்கு தகடுகள் விலைடன்னுக்கு ரூ.1,000 அதிகரிப்பு

உருக்கு துறை நிறுவனங்கள், மோட்டார் வாகனம் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பதற்கான, உருக்கு தகடுகளின் விலையை டன்னுக்கு, 1,000 ரூபாய் உயர்த்தி யுள்ளன. இதையடுத்து, ஒரு டன் உருக்கு தகடுகளின் விலை, 33 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.


உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில், உருக்கு பொருட்களுக்கான, தேவை அதிகரித்துள் ளதை அடுத்து, இதன் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரும்புத் தாது வின் விலை உயர்வும், உருக்கு பொருட்களின் விலை உயர்விற்கு காரணம் என, இத் துறையைச் சேர்ந்த, ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம், உருக்கு தகடுகளின் விலை டன்னுக்கு, 1,500 - 2,000 ரூபாய் வரை, உயர்த்தப்பட்டது.


- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -


தொடர்புடைய செய்திகள்