தேடல்

உருக்குலைந்த ரோட்டால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில், அமைக்கப்பட்ட முக்கோணத்தை அகற்றிய பின் அங்கு பேட்ஜ் ஒர்க் செய்யாததால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் அதிகளவில் உள்ளன. இதனால், இந்த ரோட்டில் எப்போதும் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். அதற்கேற்ப ரோடு இல்லாமல், குண்டும், குழியுமாக இருந்தது. இந்த ரோட்டை நகராட்சி சார்பில் கான்கிரீட் ரோடாக மாற்றப்பட்டது.
இப்பணியின் போது, நியூஸ்கிம் ரோடும், பல்லடம் ரோடும் சந்திக்கும் இடத்தில், இருந்த முக்கோணம் அகற்றப்பட்டது. அதன்பின், இந்த இடத்தில் பேட்ஜ் ஒர்க் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழ நேரிடுகிறது.
பொதுமக்கள் தரப்பில், அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பணிகள் எதுவும் மேற்கொள்வதில்லை. இதனால், விபத்துகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாவிட்டாலும், இதே நிலை நீடித்தால் விபத்துகள் தொடர்கதையாகும். எனவே, அதிகாரிகள் இந்த இடத்தில் பேட்ஜ் ஒர்க் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.