தேடல்

ராகுல்-தெலுங்கானா எதிர்ப்பு குழு சந்திப்பு

புதுடில்லி : காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை, தெலுங்கானா எதிர்ப்புக்குழு தலைவர்கள் இன்று மாலை சந்தித்து பேச உள்ளனர். தனி தெலுங்கானா குறித்த மத்திய அரசின் முடிவு தாமதமாகும் என மத்திய குலாம் நபி ஆசாத் நேற்று தெரிவித்ததை அடுத்து இன்று ராகுலை சந்திக்க உள்ளனர். இக்குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆகியோரை நேற்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.